/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசின் சாதனைகள் குறித்து பிரசார வாகனத்தில் விளக்கம்அரசின் சாதனைகள் குறித்து பிரசார வாகனத்தில் விளக்கம்
அரசின் சாதனைகள் குறித்து பிரசார வாகனத்தில் விளக்கம்
அரசின் சாதனைகள் குறித்து பிரசார வாகனத்தில் விளக்கம்
அரசின் சாதனைகள் குறித்து பிரசார வாகனத்தில் விளக்கம்
ADDED : ஜன 25, 2024 12:00 AM

வால்பாறை : மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை மக்களிடம் நேரடியாக விளக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசார வாகனம் சென்று வருகிறது. வால்பாறை ஸ்டேட் பாங்க் வளாகத்தில், நேற்று காலை மத்திய அரசின் பிரசார வாகனத்தில், வங்கி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்தும், மக்கள் எளிதில் வங்கி சேவையை பயன்பெறும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மத்திய ஆட்சியின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். முன்னதாக, வால்பாறை வந்த பிரசார வாகனத்தை ஸ்டேட் பாங்க் மேலாளர் சந்தோஷ் வரவேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி, யூனியன் வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.