/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளில் முழு துாய்மைப்பணி மேற்கொள்ளப்படும் மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம்பள்ளிகளில் முழு துாய்மைப்பணி மேற்கொள்ளப்படும் மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பள்ளிகளில் முழு துாய்மைப்பணி மேற்கொள்ளப்படும் மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பள்ளிகளில் முழு துாய்மைப்பணி மேற்கொள்ளப்படும் மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பள்ளிகளில் முழு துாய்மைப்பணி மேற்கொள்ளப்படும் மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜன 06, 2024 12:33 AM

உடுமலை;அரசுப்பள்ளிகளில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' முழு துாய்மைப்பணிகள் மேற்கொள்ள மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு மாதம் தோறும், முதல் வெள்ளிக்கிழமைகளில், அரசுப்பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துவதற்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஜன., மாத கூட்டம் நேற்று உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில் நடந்தது. உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் சாவித்ரி தலைமை வகித்தார்.
ஆசிரியர் கண்ணபிரான், கல்வித்துறை அறிவிப்புகளை பெற்றோரிடம் கலந்துரையாடினார். மேலாண்மைக்குழு துணைத்தலைவர் பிரியங்கா முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஜன., 8 முதல் 10ம் தேதி வரை, 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற கருத்தின் அடிப்படையில், வகுப்பறை வளாகம், கரும்பலகை உட்பட அனைத்து பகுதிகளிலும் துாய்மைப்பணிகள் மேற்கொள்வதற்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி செல்லா குழந்தைகள் இருக்கும் பகுதிகளில் ஆய்வு நடத்தி, அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவை மேம்படுத்துவது குறித்தும், பெற்றோரிடம் ஆசிரியர்கள் கலந்துரையாடினர்.
பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், தலைமையாசிரியர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பெற்றோர் வழிகாட்டுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.