/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சேதமடைந்த தொட்டி காத்திருக்கும் ஆபத்துசேதமடைந்த தொட்டி காத்திருக்கும் ஆபத்து
சேதமடைந்த தொட்டி காத்திருக்கும் ஆபத்து
சேதமடைந்த தொட்டி காத்திருக்கும் ஆபத்து
சேதமடைந்த தொட்டி காத்திருக்கும் ஆபத்து
ADDED : ஜன 04, 2024 09:05 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில், நிலத்தடியில் சின்டெக்ஸ் தொட்டி பதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொட்டி, இங்குள்ள அரசு குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொட்டியானது பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் அடைந்துள்ளது.
தாலுகா அலுவலகம் வரும் பொது மக்கள், தங்கள் பணி முடியும் வரை இந்த அலுவலகத்தின் பின்புறம், இந்த தொட்டி அருகே காத்திருப்பது வழக்கம். இங்கு அதிகளவு புதர் வளர்ந்து இருப்பதால், தொட்டி இருப்பது சரி வர தெரிவதில்லை.
இங்கு பொதுமக்கள் நிற்கும் போது, சேதமடைந்த சின்டெக்ஸ் தொட்டிக்குள் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், சேதமடைந்த தொட்டியை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.