/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதயம் மீட்பு கருவி வந்தாச்சு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதயம் மீட்பு கருவி வந்தாச்சு
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதயம் மீட்பு கருவி வந்தாச்சு
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதயம் மீட்பு கருவி வந்தாச்சு
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதயம் மீட்பு கருவி வந்தாச்சு
ADDED : மார் 21, 2025 02:22 AM
கோவை: அவசரகால சூழ்நிலைகளில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வாகராயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தானியங்கி வெளிப்புற இதயம் மீட்பு கருவி நேற்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர் பவன்குமார், அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரவி சாம், 'அலெர்ட்' தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறக்கட்டளை தலைவர் ராஜேஷ் ஆர்.திரிவேதி, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி, லட்சுமி ரிங் டிராவலர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜேந்திரகுமார், மோப்பிரிபாளையம் ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்று, இக்கருவியை வழங்கினர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தானியங்கி வெளிப்புற இதயம் மீட்பு கருவியை பயன்படுத்துவது தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.