/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து சீரமைக்கும் பணி; கைதாகிறார் பெரியப்பா கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து சீரமைக்கும் பணி; கைதாகிறார் பெரியப்பா
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து சீரமைக்கும் பணி; கைதாகிறார் பெரியப்பா
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து சீரமைக்கும் பணி; கைதாகிறார் பெரியப்பா
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து சீரமைக்கும் பணி; கைதாகிறார் பெரியப்பா
ADDED : ஜூன் 12, 2025 10:23 PM

கோவை; ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து சீரமைக்கும் பணி வழங்கப்பட்டது.
விளாங்குறிச்சி பகுதியில் கடந்த மே 31ம் தேதி நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டு கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில், 12 ஆடுகள், 2 நாய்கள் உயிரிழந்தன. ஆடு மேய்த்து சென்ற ரவி, 60 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பாப்பம்பட்டியில் இருந்து ஆடுகளை மேய்ச்சலுக்காக அத்திப்பாளையம் அழைத்து சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, அந்த காரை ஓட்டி வந்தது சரவணம்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் தனது பெரியப்பாவின் காரை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிறுவனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிறுவன், 30 நாட்கள் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சிறுவனுக்கு கார் கொடுத்த அவரது பெரியப்பா மற்றும் கார் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.