/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரி செலுத்தாததால் 7 கடைகளுக்கு 'சீல்' வரி செலுத்தாததால் 7 கடைகளுக்கு 'சீல்'
வரி செலுத்தாததால் 7 கடைகளுக்கு 'சீல்'
வரி செலுத்தாததால் 7 கடைகளுக்கு 'சீல்'
வரி செலுத்தாததால் 7 கடைகளுக்கு 'சீல்'
ADDED : மார் 24, 2025 11:12 PM
வால்பாறை; வால்பாறை, மார்க்கெட் பகுதியில் வரி செலுத்ததாக, ஏழு கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி, 'சீல்' வைத்தனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் மொத்தம், 1,900 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் மாதவாடகை அடிப்படையில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
வால்பாறை புதுமார்க்கெட்டில் மட்டும், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்நிலையில், கெடு முடிந்த பின்னும், சில கடைகளில் வாடகை பாக்கி செலுத்தவில்லை.
அதனால், வால்பாறை நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் சென்று, வாடகை செலுத்தாத, ஏழு கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.