/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய 7 பஸ்கள் வந்தாச்சு! இரு தினங்களில் இயக்கம் புதிய 7 பஸ்கள் வந்தாச்சு! இரு தினங்களில் இயக்கம்
புதிய 7 பஸ்கள் வந்தாச்சு! இரு தினங்களில் இயக்கம்
புதிய 7 பஸ்கள் வந்தாச்சு! இரு தினங்களில் இயக்கம்
புதிய 7 பஸ்கள் வந்தாச்சு! இரு தினங்களில் இயக்கம்
ADDED : ஜூன் 06, 2025 12:22 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, ஏழு புதிய அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து, 105 அரசு டவுன் பஸ்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ஒவ்வொன்றும், நாள் ஒன்றுக்கு, 280 முதல் 340 கி.மீ., துாரம் வரை இயக்கப்படுகின்றன.
இந்த டவுன் பஸ்களை நம்பியே, சுற்றுப்பகுதி கிராம மக்கள், அலுவலகம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் டவுன் பஸ்களால், பயணியர் பரிதவித்தும் வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, உதிரி பாகங்களில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக, டிரைவர் மற்றும் கண்டக்டர் திணறி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொறுட்டு, பழைய பஸ்களுக்கு மாற்றாக, புதிய பஸ்கள் தருவித்து, வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது, பணிமனை -1ல் இரண்டு பஸ்கள், பணிமனை --2ல் இரண்டு பஸ்கள், பணிமனை --3ல் மூன்று புதிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பணிமனைகளுக்கு புதிய பஸ்கள் வந்துள்ளன. இரு தினங்களில், அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படும். குறிப்பாக, தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படும் வழித்தடங்களில், இந்த புதிய பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.