/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 686 லிட்டர் மது; 72 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு மாதங்களில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை 686 லிட்டர் மது; 72 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு மாதங்களில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
686 லிட்டர் மது; 72 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு மாதங்களில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
686 லிட்டர் மது; 72 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு மாதங்களில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
686 லிட்டர் மது; 72 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு மாதங்களில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
ADDED : ஜூன் 01, 2025 01:39 AM
கோவை, : கோவை மாநகர பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களில் 686 லிட்டர் மதுபானங்கள், 72 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகர பகுதிகளில், மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் இடையே போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதன் விளைவாக, குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க துவங்கின. இந்நிலையில், இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை மாநகர போலீசார் கமிஷனர் சரவண சுந்தர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தினசரி டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் பிற இடங்களை காண்காணித்து வந்தனர்.
பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல், பிளாக்கில் மதுவிற்பனை போன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
2024ம் ஆண்டு ஜன., முதல் டிச., வரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1275.106 லிட்டர் மதுபானங்கள், 61.813 கிலோ கஞ்சா, 324 கிராம் மெத்தபெட்டமைன், 31,898 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஜன., 1ம் தேதி முதல் ஏப்., 30ம் தேதி வரை மொத்தம் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட, 686.200 லிட்டர் மதுபானங்கள், 23 லிட்டர் கள் மற்றும் 72.701 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதுவிலக்கு அமலாக்க போலீசாரின் நடவடிக்கையால், சட்ட விரோத மது விற்பனை குறைந்துள்ளது. தினசரி டாஸ்மாக் மதுக்கடை, பார்களில் சோதனை மேற்கொள்கின்றனர். 12 மணிக்கு முன் மற்றும் இரவு 10 மணிக்கு மேல், மது விற்பனை செய்யும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்' என்றார்.