/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'ஸ்மார்ட்' ஆக மாறும் 625 பள்ளிகள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் 'அப்பாடா''ஸ்மார்ட்' ஆக மாறும் 625 பள்ளிகள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் 'அப்பாடா'
'ஸ்மார்ட்' ஆக மாறும் 625 பள்ளிகள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் 'அப்பாடா'
'ஸ்மார்ட்' ஆக மாறும் 625 பள்ளிகள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் 'அப்பாடா'
'ஸ்மார்ட்' ஆக மாறும் 625 பள்ளிகள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் 'அப்பாடா'
ADDED : ஜன 31, 2024 12:36 AM
கோவை;கோவை மாவட்டத்தில், 625 தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க, பட்டியல் வெளியிடப்பட்டதால், கல்வி வீடியோக்கள் திரையிடுவதில் இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு, தீர்வு கிடைத்துள்ளது. ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் சிலபஸ் அடிப்படையில், பாடங்கள் கையாளப்படுகின்றன.
இதில், இரு வாரங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, மாதாந்திர ஆன்லைன் தேர்வு நடத்துவது, பாடங்களுக்கான வீடியோக்கள் திரையிடல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள, தொழில்நுட்ப வசதி இல்லாததால், ஆசிரியர்கள் தங்கள் சொந்த மொபைல் போனை பயன்படுத்தினர்.
வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும், ஒரே போன் கொண்டு, கற்றல், கற்பித்தல், தேர்வு செயல்பாடுகள் மேற்கொள்வதில் உள்ள, நடைமுறை சிக்கல்கள் குறித்து, ஆசிரியர்கள் தொடர்ந்துபுகார் தெரிவித்து வந்தனர்.
இதனடிப்படையில், நடுநிலைப்பள்ளிகளுக்கு ஹைடெக் ஆய்வகமும், தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறையும் அமைத்துத்தர, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 625 தொடக்கப்பள்ளிகளின் பெயர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அடுத்த கல்வியாண்டுக்குள், இதை பள்ளிகளில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில், 'தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, காட்சி வழி கற்பித்தல் முறையால், எளிதில் கருத்துகளை உள்வாங்கி கொள்கின்றனர். இதற்கான வீடியோ கன்டென்ட், 'தமிழ்நாடு டீச்சர் பிளாட்பார்ம்' செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதை மொபைல்போன் திரையில் காட்டுவதற்கு பதிலாக, ஸ்மார்ட் போர்டில் திரையிட்டால், அனைத்து மாணவர்களும், ஒரே நேரத்தில் காண வசதியாக இருக்கும். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்றனர்.