/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அறிவு சார் மையத்தில் 6 ஆயிரம் புத்தகங்கள்அறிவு சார் மையத்தில் 6 ஆயிரம் புத்தகங்கள்
அறிவு சார் மையத்தில் 6 ஆயிரம் புத்தகங்கள்
அறிவு சார் மையத்தில் 6 ஆயிரம் புத்தகங்கள்
அறிவு சார் மையத்தில் 6 ஆயிரம் புத்தகங்கள்
ADDED : ஜன 06, 2024 01:07 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் மணி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 87 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நுாலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இம்மையத்தில் கதை, கவிதை புத்தகங்களும், போட்டி தேர்வுக்கான புத்தகங்களும் தனித்தனி ரேக்குகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 13 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் டேபிள், மாடியில் 12 பேர் அமர்ந்து படிக்கவும், தரைப்பகுதியில் 35 பேர் அமர்ந்து படிக்க, உபகரணங்கள் உள்ளன.
மேலும் சிறுவர்களுக்கென சிறிய ரவுண்ட் டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகள், பாடத்திட்ட புத்தகங்கள் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன.
திறப்புவிழாவில், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், நகராட்சி கமிஷனர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.