/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 600 வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பம் 600 வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பம்
600 வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பம்
600 வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பம்
600 வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பம்
ADDED : செப் 26, 2025 05:57 AM
கோவை, ; மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முகாம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 22ல் துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
புதிய சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'காலை 10 முதல் மாலை 5 மணி வரை வங்கி கடன் முகாம் நடக்கிறது. மூன்று நாட்களில், 600க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்தனர்.
இவர்களில், 170 பேர் புதிய வியாபாரிகள். சாலையோர வியாபாரிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்' என்றனர்.