/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் இரு இடங்களில் 60 பவுன் தங்க நகை மாயம்கோவையில் இரு இடங்களில் 60 பவுன் தங்க நகை மாயம்
கோவையில் இரு இடங்களில் 60 பவுன் தங்க நகை மாயம்
கோவையில் இரு இடங்களில் 60 பவுன் தங்க நகை மாயம்
கோவையில் இரு இடங்களில் 60 பவுன் தங்க நகை மாயம்
ADDED : ஜன 07, 2024 12:14 AM
கோவை;ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் வீடு உட்பட இரு இடங்களில், 60 பவுன் நகை கொள்ளை போனது.
கோவை நியூ சித்தாபுதுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 65; தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சில மாதங்களுக்கு முன் 51 பவுன் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை, பீரோவில் வைத்தார்.
அதன்பின் மீண்டும் கிருஷ்ணன், மனைவியுடன் கோத்தகிரி சென்று வீடு திரும்பினார். சில நாட்கள் கழித்து பீரோவை திறந்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த, 51 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. கிருஷ்ணன், காட்டூர் போலீசில் புகார் அளித்தார். பணிப்பெண் மீதும், ஏ.சி., பழுது பார்க்க வந்த வாலிபர் ஒருவர் மீதும், சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
9 பவுன் நகை மாயம்
கோவை ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி நிவேதா, 33. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பீரோவில், 9 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது, நகைகள் காணாமல் போயிருந்தன. நிவேதா புகாரின் படி, ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.