/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய்ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய்
ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய்
ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய்
ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய்
ADDED : பிப் 24, 2024 01:40 AM
ராணிப்பேட்டை;''ராணிப்பேட்டை மாவட்டத்தில், 541 பேருக்கு ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்பட்ட சுகாதார நிலையங்களை திறந்து வைத்த அவர் பேசியதாவது:
ராணிப்பேட்டை, திருப்பத்துார், கன்னியாகுமாரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. எனவே, பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
இவற்றை தடுக்க புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம், கடந்த ஆண்டு நவ., 22ல், நான்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இதன் வாயிலாக இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 222 நபர்களுக்கு மார்பக புற்று நோய், 29 நபர்களுக்கு வாய்ப்புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இவை ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டதால், அனைவரும் குணப்படுத்தப்படுவர். இவ்வாறு பேசினார்.