/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்' மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'
மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'
மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'
மாநகர போலீசார் 5 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 06, 2025 09:09 AM
கோவை; பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட மாநகர போலீசார் ஐந்து பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 20 போலீஸ் ஸ்டேஷன்களில், 1,000 க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் இரவில், வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவது, சரக்கு வாகனங்களில் பணம் வசூலித்தது, பல்வேறு வழக்குகளில் புகார் தாரர்களிடம் லஞ்சம் பெற்றது மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த தலைமை காவலர் மணிகண்டன், செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் வடிவேலு, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் கபூர், கான்ஸ்டபிள் வினோத், வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.