/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் நீதி மன்றத்தில் 481 வழக்குகளுக்கு தீர்வு மக்கள் நீதி மன்றத்தில் 481 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதி மன்றத்தில் 481 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதி மன்றத்தில் 481 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதி மன்றத்தில் 481 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 09:49 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஏழு கோடியே, 79 லட்சத்து, 30 ஆயிரத்து, 588 ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கோர்ட்டில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடந்தது. சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், சரவணக்குமார், பிரகாசம், முதன்மை மாவட்ட உரிமையில் நீதிபதி சுஜாதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வக்கீல் சங்கத் தலைவர் துரை, இணை செயலாளர் அருள், வக்கீல்கள் மயில்சாமி, வெங்கடேஷ், வேலு, பாலசுப்ரமணியம், வனிதா பங்கேற்றனர்.
இதில், சப் - கோர்ட், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம்., 1, ஜே.எம்.,2 கோர்ட்டுகளில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக்மோசடி, உணவு கலப்பட வழக்குகள், மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரான வழக்குகள், ஜீவானம்சம் வழக்கு, விபத்து காப்பீடு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
மொத்தம், 2,944 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம், ஏழு கோடியே, 79 லட்சத்து, 30 ஆயிரத்து, 588 ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக, வட்ட சட்டப்பணிகள் குழுவினர் தெரிவித்தனர்.