/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பணியில் நேர்மையாக இருந்ததால் 42வது முறையாக பணியிட மாற்றம்பணியில் நேர்மையாக இருந்ததால் 42வது முறையாக பணியிட மாற்றம்
பணியில் நேர்மையாக இருந்ததால் 42வது முறையாக பணியிட மாற்றம்
பணியில் நேர்மையாக இருந்ததால் 42வது முறையாக பணியிட மாற்றம்
பணியில் நேர்மையாக இருந்ததால் 42வது முறையாக பணியிட மாற்றம்
ADDED : பிப் 12, 2024 01:00 AM
அன்னூர்;அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர், 42வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலராக, மோகனரங்கன் 2022 டிச., 23ம் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறுகையில், 'மோகனரங்கன் இதற்கு முன்பு தாளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்தார். எந்த பேரூராட்சியில் பணிபுரிந்தாலும், நூறு சதவீதம் விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மட்டுமே அனுமதி அளிப்பார்.
அனைத்து செலவுகளையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே, காசோலையில் கையெழுத்திடுவார். அன்னூர் பேரூராட்சியில் ஊழியர்கள் அதிகமாக இருப்பதாக கூறி, 15 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
எந்த பேரூராட்சியிலும், ஒன்றரை ஆண்டுக்கு மேல் இவர் பணிபுரிந்ததில்லை. அன்னூர் பேரூராட்சியில், 14 மாதங்கள் பணிபுரிந்துள்ளார். பணியில் சேர்ந்த, 30 ஆண்டுகளில், 42 ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சின்னசேலத்தில் 43வது முறையாக பொறுப்பேற்கிறார்' என்றனர்.