/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்; புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் காயம் விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்; புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் காயம்
விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்; புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் காயம்
விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்; புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் காயம்
விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்; புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் காயம்
ADDED : செப் 11, 2025 09:23 PM

பொள்ளாச்சி; புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் வில்லியனுார் பகுதியை சேர்ந்த ஆண்கள், 24 பேர், நேற்றுமுன்தினம் வால்பாறைக்கு வந்தனர். வால்பாறை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து, நேற்று மதியம் புதுச்சேரிக்கு வேனில் சென்றனர்.
ஆழியாறு அருகே, காண்டூர் கால்வாய் அருகே மலைப்பாதையில் வேன் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் இடது பக்கமாக இருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், புதுச்சேரியை சேர்ந்த பாலா, 20, கமலேஷ்,16, ஜான்,18, டிரைவர் மனோகர்,25, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.