Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்ற 37 பேர் கைது

காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்ற 37 பேர் கைது

காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்ற 37 பேர் கைது

காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்ற 37 பேர் கைது

ADDED : அக் 02, 2025 10:49 PM


Google News
கோவை:காந்தி ஜெயந்தி தினமான நேற்று மதுபானங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மற்றும் 'பார்'கள் செயல்பட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி, சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என, கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.

பெ.நா.பாளையம் உட்கோட்டத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 32 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பேரூர் உட்கோட்டத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 118 மது பாட்டில்கள் மற்றும் 7 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டு, 110 மது பாட்டில்கள் மற்றும் 11 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி உட்கோட்டத்தில் மூவர் கைது செய்யப்பட்டு, 27 மது பாட்டில்கள் மற்றும் 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறையில், 6 பேர் கைது செய்யப்பட்டு, 408 மது பாட்டில்கள் மற்றும் 15 லிட்டர் கள் பறிதமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில், 8 பேர் கைது செய்யப்பட்டு, 157 மது பாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சோதனையில், 7 பேர் கைது செய்யப்பட்டு, 84 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் முழுவதும் 37 பேர் கைது செய்யப்பட்டு, 936 மது பாட்டில்கள் மற்றும் 77 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us