/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 30,506 பேருக்கு சிகிச்சை தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 30,506 பேருக்கு சிகிச்சை
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 30,506 பேருக்கு சிகிச்சை
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 30,506 பேருக்கு சிகிச்சை
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 30,506 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூன் 05, 2025 11:21 PM
சென்னை:சென்னை கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்பேட்டையில், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், தொழிலாளர்களின் பணியிடம் தேடி தொற்றா நோய்களுக்கான பரிசோதனை திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் வகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், 2.34 கோடி பேர் பயன் பெற்றுவருகின்றனர்.
இதில், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே, தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், 2024ல் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், 711 தொழிற்சாலைகளில் பணியாற்றும், 8.35 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 30,506 பேருக்கு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும், அந்நோய் இருப்பதே தெரியாமல் இருந்தனர்.
இந்த திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், சிறு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொற்றா நோய் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது. இதில், 7,750 சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.