Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிதாக அமைகிறது 3 ரயில்வே டிராக்; 3 பிளாட்பாரம்! பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்

புதிதாக அமைகிறது 3 ரயில்வே டிராக்; 3 பிளாட்பாரம்! பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்

புதிதாக அமைகிறது 3 ரயில்வே டிராக்; 3 பிளாட்பாரம்! பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்

புதிதாக அமைகிறது 3 ரயில்வே டிராக்; 3 பிளாட்பாரம்! பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்

ADDED : செப் 09, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், 19 கோடி ரூபாய் செலவில், புதிதாக மூன்று ரயில் டிராக்குகளும், பிளாட்பாரங்களும் அமைக்கப்பட உள்ளன.

மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன், 150 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, மிகவும் பழமையான ஸ்டேஷன் ஆகும். அப்போது ஸ்டேஷனில் இரண்டு ரயில்வே டிராக்குகளும், ஊட்டி செல்லும் மலை ரயில் டிராக்குகள் இரண்டும் மற்றும் இரண்டு பிளாட்பாரங்கள் மட்டும் அமைக்கப்பட்டிருந்தது.

இதுவரை மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் எவ்வித வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறாமல், புதிய ரயில் பாதைகள் ஏதும் அமைக்கப்படாமல் இருந்தன. தற்போது அதிக அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின், 12 பெட்டிகள் மேட்டுப்பாளையத்திலும், மீதமுள்ள, 12 பெட்டிகள் கோவை ரயில்வே ஸ்டேஷனிலும் இதுவரை நிறுத்தப்பட்டு வந்தன. மேட்டுப்பாளையம் ஸ்டேஷனில், 24 பெட்டிகள் நிற்கும் வகையில், பிளாட்பாரமும், ரயில்வே டிராக்குகளும் விரிவுபடுத்தப்படுகின்றன. இதைத் தொடர்ந்து தற்போது சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின், 24 பெட்டிகளும், மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், மூன்று ரயில்வே டிராக்குகள் புதிதாக அமைக்கப்படுகின்றன. இதனால், 24 பெட்டிகள் கொண்ட நான்கு ரயில்கள், ஒரே நேரத்தில் நிறுத்தலாம். கோவையில் ரயில் பெட்டிகள் நிறுத்துவதற்கு இட நெருக்கடி உள்ளது.

அதனால் எதிர்காலத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை கணக்கிட்டு ரயில்வே நிர்வாகம், புதிய ரயில்வே டிராக்குகள் அமைத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு, 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது அல்லாமல் அம்ருத் திட்டத்தில், 10 கோடி ரூபாய் செலவில், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் பாரம்பரியம் மாறாமல், புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us