/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ 27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
ADDED : செப் 07, 2025 02:34 AM

மதுவுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு, தற்போது திரைக்கு வந்துள்ள சினிமா குயிலி. லிசி ஆண்டனி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள ரவிச்சந்திரன், காரமடை அருகே திம்மம்பாளையத்தை சேர்ந்தவர்.
தனது கலை உலகப் போராட்டம் குறித்து ரவிச்சந்திரனிடம் பேசியபோது...
பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் சினிமா ஆசையில் சென்னை சென்றேன். அங்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், கலை இயக்குனர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன். இயக்குனர் பாலாவின், 'பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் கலை இணை இயக்குனராக பணிபுரிந்தபடி நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன்.
எங்கள் பகுதியைச் சேர்ந்த முருகசாமிக்கு குயிலி படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் மதுவுக்கு அடிமையாகி இறக்கும் கதாநாயகனாக நடித்துள்ளேன். ஏழை அடித்தட்டு மக்கள் மதுவால் பாதிக்கப்படுவது குறித்தும், அதற்கு எதிராக போராடும் மக்கள் குறித்தும் அப்படம் பேசுகிறது. அதன் காரணமாகவே பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.
கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதற்கான எனது 27 ஆண்டு போராட்டம் தற்போது நிறைவேறியுள்ளது. எனது கிராமத்துக்கு அருகில் உள்ள அன்னுாரில் இத்திரைப்படம் ஓடுவது மகிழ்ச்சி. தாய்மார்கள் பலரும் பாராட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளுக்காக இப்படத்தை தயாரிப்பாளர் அனுப்ப உள்ளதாக, கூறினார்.