ADDED : ஜன 03, 2024 11:56 PM
உடுமலை : மக்களுடன் முதல்வர் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 57 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன; 26,278 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சார்பில், மக்களின் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் இதற்கான முகாம்களில் பங்கேற்று வருகின்றனர். மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 18ம் தேதி துவங்கிய மக்களுடன் முதல்வர் திட்டம், நாளை வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை 57 முகாம்கள் நடத்தப்பட்டு, 26,278 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.