ADDED : ஜன 06, 2024 12:55 AM
கோவை;தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும், சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி.
கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் இந்த அணை முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கோவையில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சிறுவாணி அடிவாரத்தில், 26 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நீர் மட்டமானது, 29.58 அடியாக இருந்த நிலையில் குடிநீர் தேவைக்காக, 7.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.