/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்
களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்
களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்
களவு போன ரூ.20.39 கோடி பொருட்கள் கண்டுபிடிப்பு; மேற்கு மண்டல ஐ.ஜி., பெருமிதம்
ADDED : ஜன 05, 2024 12:13 AM
-நமது நிருபர்-
''ஆதாய கொலை மற்றும் திருட்டு வழக்குகள் 2022ம் ஆண்டில், 2,762 வழக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில், 2,441 வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என்று மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
l களவு போன சொத்துகளில், 81 சதவீதம் கண்டு பிடிக்கப்பட்டு, அதில் 69 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அதாவது, களவு போன ரூ.29,45,02,145 மதிப்புள்ள பொருட்களில் ரூ.20,39,42,707 மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
l கொலை, கொலை முயற்சி, கலகம் மற்றும் அடி,தடி வழக்குகள், 2022-ம் ஆண்டு, 5,128 இருந்தது. கடந்தாண்டில், 4,303 ஆக குறைந்துள்ளது. இது, 2022ம் ஆண்டை விட, 825 வழக்குகள் குறைவாகும்.
l போக்சோ வழக்குகள் , 2022ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டில், 226 வழக்குகள் குறைந்து உள்ளன. கடந்தாண்டில், 131 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
l 2022ம் ஆண்டை காட்டிலும் வாகன விபத்து இறப்பு வழக்குகள் கடந்தாண்டில், 131 குறைந்துள்ளன. வாகன விபத்து மரணங்களும், 2022ம் ஆண்டை விட கடந்தாண்டு, 110 குறைந்துள்ளது. சிறு காய வழக்குகள் அதிகரித்த போதும், கொடுங்காய வழக்குகள் குறைத்துள்ளன.
l 2022ம் ஆண்டு, 4,324 விபத்து இறப்புகளும், கடந்தாண்டில், 4,214 இறப்புகளும் பதிவாகி உள்ளது. நீதிமன்றத்தால், 2022ம் ஆண்டு, 65 கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்தன. கடந்தாண்டில், 73 கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன.
l 2022ம் ஆண்டு, 4 ஆதாய கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்தன. கடந்தாண்டு, 5 ஆதாய கொலை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன.
l 2022-ம் ஆண்டு, 44 வழிப்பறி கொள்ளை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. கடந்தாண்டு, 74 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. எட்டு கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
l குட்கா வழக்குகள் 2022ம் ஆண்டில், 3,752ம், கடந்தாண்டில், 6,773 வழக்கும் பதியப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வழக்குகள் 2022ம் ஆண்டு, 1816 வழக்கும், கடந்தாண்டில், 1799 வழக்கும் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.