Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 180 கிலோ கழிவு பொருட்கள் அகற்றம்

180 கிலோ கழிவு பொருட்கள் அகற்றம்

180 கிலோ கழிவு பொருட்கள் அகற்றம்

180 கிலோ கழிவு பொருட்கள் அகற்றம்

ADDED : செப் 21, 2025 11:10 PM


Google News
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 'தூய்மை மிஷன்' திட்டத்தின் கீழ் சுமார் 180 கிலோ கழிவு பொருட்கள் தரம் பிரித்து அகற்றப்பட்டன.

தமிழக அரசின் அறிவுறுத்தல் படி, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காகித குப்பைகள், பயன்பாடு அற்ற கண்ணாடி பொருட்கள், மின்னணு கழிவுகள், உடைந்த மரப்பொருட்கள், உபயோகமற்ற தளவாடப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து அந்த தொகையை அரசு கணக்கில் செலுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கோவை மாவட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இப்பணி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) செந்தில்குமார் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் நடந்தது.

இதில் பயன்படுத்தப்படாத 180 கிலோ கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கூறுகையில், 'பயன்பாடு அற்ற ஒரு ரோடு ரோலர், ஒரு ஜீப் வாகனம், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை 'தூய்மை மிஷன்' திட்டத்தின் கீழ் விரைவில் ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us