/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேல்நீராறில் 176 மி.மீ., மழை; பள்ளிகளுக்கு விடுமுறை மேல்நீராறில் 176 மி.மீ., மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
மேல்நீராறில் 176 மி.மீ., மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
மேல்நீராறில் 176 மி.மீ., மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
மேல்நீராறில் 176 மி.மீ., மழை; பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஜூன் 16, 2025 10:31 PM

வால்பாறை; வால்பாறையில் கனமழை பெய்வதால், பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக, வால்பாறையில் காற்றுடன் கனமழை பெய்கிறது.
நேற்று இரவு விடிய, விடிய பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர் மழையால் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.மழையால், பெரும்பலான எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இடைவிடாமல் பெய்த கனமழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணியர் வருகையும் குறைந்தது.
இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் எட்டு அடி உயர்ந்து, காலை, 8:00 மணி நிலவரப்படி, 108.15 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,334 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 883 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடபட்டுள்ளது.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 122, பரம்பிக்குளம் - 52, ஆழியாறு - 6, வால்பாறை - 69, மேல்நீராறு - 176, கீழ்நீராறு - 121, காடம்பாறை - 21, மேல்ஆழியாறு - 8, சர்க்கார்பதி - 30, வேட்டைக்காரன்புதுார் - 13, மணக்கடவு - 12, துணக்கடவு - 22, பெருவாரிப்பள்ளம் - 25, நவமலை - 8, பொள்ளாச்சி - 13 என்ற அளவில் மழை பெய்தது.