/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகைக்கடை திறப்பதாக கூறி 170 சவரன் தங்கம் மோசடிநகைக்கடை திறப்பதாக கூறி 170 சவரன் தங்கம் மோசடி
நகைக்கடை திறப்பதாக கூறி 170 சவரன் தங்கம் மோசடி
நகைக்கடை திறப்பதாக கூறி 170 சவரன் தங்கம் மோசடி
நகைக்கடை திறப்பதாக கூறி 170 சவரன் தங்கம் மோசடி
ADDED : ஜன 10, 2024 11:41 PM
செல்வபுரம்:கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 49. தங்கக்கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்துகிறார்.
இவருக்கு, சில நாட்களுக்கு முன், சாமியார் புது வீதியைச் சேர்ந்த விஸ்வநாதன், 47, என்பவர் அறிமுகமானார். அவர், சரவணனிடம், தான் புதிதாக திறக்கவுள்ள நகைக்கடைக்கு நகைகள் கேட்டார்.
இதையடுத்து சரவணன் கடந்த மாதம் இரண்டு தவணைகளாக, 170 சவரன் தங்கக்கட்டிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், உறுதியளித்தது போல், விஸ்வநாதன் நகைக்கடையை துவக்கவில்லை. தங்கக்கட்டிகளை சரவணன் திருப்பிக்கேட்டும், தராமல் விஸ்வநாதன் ஏமாற்றி வந்தார்.
இதையடுத்து, செல்வபுரம் போலீசில் விஸ்வநாதன் மீது சரவணன் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.