/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நீரா' உற்பத்தி செய்த 17 நிறுவனங்கள் மூடல் 'நீரா' உற்பத்தி செய்த 17 நிறுவனங்கள் மூடல்
'நீரா' உற்பத்தி செய்த 17 நிறுவனங்கள் மூடல்
'நீரா' உற்பத்தி செய்த 17 நிறுவனங்கள் மூடல்
'நீரா' உற்பத்தி செய்த 17 நிறுவனங்கள் மூடல்
ADDED : செப் 16, 2025 12:21 AM
பொள்ளாச்சி; தமிழகத்தில் 'நீரா' பானம் உற்பத்திக்கு அனுமதி பெற்ற 21 நிறுவனங்களில், 17 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில், தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டது. மொத்தம் 21 நிறுவனங்கள் நீரா பானம் உற்பத்திக்கு அனுமதி பெற்றன.
தென்னை மரங்களின் பாளைகளில், 'ஐஸ் பாக்ஸ்' முறையில் நீரா பானம் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. நீரா பானத்தைக் கொண்டு தேன், சர்க்கரை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டன.
தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது நான்கு நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தை, லாபம் இல்லையென்றாலும் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன. மீதமுள்ள 17 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன .
தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், சந்தைப்படுத்தவும் போதிய வசதிகள் இல்லாததே இந்நிறுவனங்கள் மூடலுக்கு முக்கிய காரணம் என, தென்னை உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் தெரி வித்தனர்.