/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கட்டுமான பொருட்களால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம்கட்டுமான பொருட்களால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம்
கட்டுமான பொருட்களால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம்
கட்டுமான பொருட்களால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம்
கட்டுமான பொருட்களால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம்
ADDED : ஜன 04, 2024 12:32 AM
கோவை : போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டில் கட்டுமான பொருட்களை குவித்து வைத்திருந்த இரு வீட்டின் உரிமையாளர்களுக்கு, ரூ 1.5 லட்சம் நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 73வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில், ரோட்டோரம் போக்குவரத்துக்கு இடையூறாக மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை குவித்து வைத்திருந்த, வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மற்றொரு உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் என, மொத்தம் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து, கமிஷனர் உத்தரவிட்டார்.
அங்கிருந்து கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்ட அவர், மாநகராட்சி பகுதிகளில் இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக, கட்டுமான பொருட்களை குவித்து வைப்போர் மீது அபராதம் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.