/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 1,070 கோடி ரூபாய் கடன் வினியோகம்சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 1,070 கோடி ரூபாய் கடன் வினியோகம்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 1,070 கோடி ரூபாய் கடன் வினியோகம்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 1,070 கோடி ரூபாய் கடன் வினியோகம்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 1,070 கோடி ரூபாய் கடன் வினியோகம்
ADDED : பிப் 23, 2024 11:47 PM
கோவை;கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த சிறப்பு முகாம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,070 கோடி கடன் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 29 ஆயிரத்து, 743 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை, நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கவும், அரசின் திட்டங்கள் மூலம் விண்ணப்பிக்கும் அனைத்து பயனாளிகளுக்கும் கடன் கிடைக்கவும், மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில் முனைவோருக்கான கடன் வசதியாக்கல் முகாம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா துவக்கி வைத்தார். பொது மேலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு திட்டங்களின் கீழ், கடன் அனுமதி மற்றும் கடன் பட்டுவாடா செய்யப்பட்டது. உலக முதலீட்டாளர் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் சில, இம்முகாமில் பங்கேற்று, தற்காலிக கடன் அனுமதி பெற்றன. 1,070 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி, திட்ட மேலாளர் பிருந்தாதேவி மற்றும் வங்கி அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.