/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு டிரைவரிடம் நுாதன மோசடிரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு டிரைவரிடம் நுாதன மோசடி
ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு டிரைவரிடம் நுாதன மோசடி
ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு டிரைவரிடம் நுாதன மோசடி
ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு டிரைவரிடம் நுாதன மோசடி
ADDED : ஜன 05, 2024 01:40 AM
கோவை;ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டை கொடுத்து டிரைவரிடம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமர், 29. கார் டிரைவர். இவரை, நேற்றுமுன்தினம் ஒருவர் மொபைல் போன் வாயிலாக அழைத்து, டாக்டர் பிரவீன் மேனன் என்று அறிமுகம் செய்து, கார் வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தொடர்ந்து அமரை, அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளார். அமரும் தனது காருடன் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த பிரவீன் மேனன் காரில் ஏறி ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவர், அமரிடம் தனது வங்கி கணக்கில் பணம் குறைவாக இருப்பதாகவும், கூகுல் பே வாயிலாக வங்கி கணக்குக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்தால் கையில் பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அவரிடம் பணத்தை பெற்ற அமர் ரூ.10 ஆயிரத்தை பிரவீன் மேனன் கூறிய மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.
பின், பிரவீன் மேனன், ஒரு போன் செய்து தருவதாக கூறி அமரின் மொபைல் போனை வாங்கி திடீரென போனுடன் மாயமானார். உடனே அமர் தனது மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து அமர் நட்சத்திர ஓட்டலுக்குள் சென்று டாக்டர் பிரவீன் மேனன் குறித்து விசாரித்தார்.
அதற்கு அப்படி யாரும் ஓட்டலுக்கு வரவில்லை என ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த அமர், அந்த நபர் தந்த, 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சோதித்துப் பார்த்தார். அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அமர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.