/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
ADDED : ஜூலை 01, 2025 12:20 PM

கோவை:
''புதிய தொழில்நுட்பங்கள், நவீனப்படுத்துதல் வாயிலாக, 2030ல் 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை சாத்தியப்படுத்துவோம்,'' என, மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா கூறினார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு சிட்டி சார்பில், மூன்றாவது செயற்கை இழை மாநாடு, கோவையில் நேற்று நடந்தது. மாநாட்டைத் துவக்கி வைத்து, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான வழிகாட்டுதலில், ஜவுளித்துறை வளர்ந்து வருகிறது. பிரிட்டன் உடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுடன், இறுதிக்கட்டத்தில் உள்ளோம்.
வரும், 2030ல் இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு 300 பில்லியன் டாலர்களாகவும், ஏற்றுமதி 100 பில்லியன் டாலர்களாகவும் இருக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.
இந்தியாவில் மூலப்பொருள், உள்நாட்டுத் தேவை, திறன் என அனைத்தும் உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள், நவீனப்படுத்துதல் வாயிலாக, 2030ல் 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை சாத்தியப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா பேசுகையில், ''நம் நாட்டின் பின்னலாடை மொத்த ஏற்றுமதியில், 60 சதவீத பங்களிப்புடன், திருப்பூர் ஏற்றுமதி கேந்திரம், முன்மாதிரியாக திகழ்கிறது,'' என்றார்.