ADDED : மே 31, 2025 04:26 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் நேற்று முன் தினம் தெரு நாய் ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது. இந்த நாய் சாலையில் செல்வோரை துரத்தியது.
நாயை கண்டு ஓட முயன்ற பெரியவர்களை துரத்தி சென்று கடித்தது. அதன் படி 10 பேரை இந்நாய் கடித்து காயப்படுத்தியது. இவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினர்.
ஒரே நாளில் 10 பேரை நாய் கடித்ததை அடுத்து, அப்பகுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.----