/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் யோகா தினம் பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் யோகா தினம்
பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் யோகா தினம்
பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் யோகா தினம்
பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் யோகா தினம்
ADDED : ஜூன் 23, 2024 12:14 AM

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்துள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில், சர்வதேச யோகா தினம் முன்னிட்டு செயல்விளக்கம் நடந்தது.
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் சாலையில் குரும்பபாளையம் பிரிவு அருகே உள்ள பள்ளி வளாகத்தில், பள்ளியின் நிறுவனர் கனகாச்சலம், அறங்காவலர் திருமூர்த்தி ஆகியோர் தலைமையில், யோகா செயல் விளக்கம் நடந்தது.
மாணவர்கள் தனி மற்றும் குழுவாக பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். முன்னதாக பள்ளி முதல்வர் வனிதா, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். துணை முதல்வர் முத்துகுமாரி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.