ADDED : ஜூன் 27, 2024 09:54 PM
நெகமம் : நெகமம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெகமம், அனுப்பர்பாளையத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை நடப்பதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி லோகநாதன், 52, சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவரை போலீசார் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.