/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொசுத்தொல்லையால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? கொசுத்தொல்லையால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
கொசுத்தொல்லையால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
கொசுத்தொல்லையால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
கொசுத்தொல்லையால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
ADDED : ஜூலை 10, 2024 01:40 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, கொசு தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், ரோட்டோரத்தில் மழை நீர் மற்றும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதர்மண்டிக் கிடக்கும் செடி, கொடிகள் மற்றும் நீர்நிலைகளில் தங்கி இருக்கும் கொசுக்கள் இரவு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கொசு விரட்டி சுருள், திரவ கொசு விரட்டி, போன்றவற்றை பயன்படுத்தினாலும், அதற்கெல்லாம் கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இதனால், துாக்கமின்றி தவிக்கின்றனர்.
கொசுக்களை கட்டுப்படுத்த நகராட்சியில், குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இதன்வாயிலாக, தேவையான கொசு மருந்துகள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். இதற்கான பணிகள், முழுவீச்சில் செயல்படுத்தாத காரணத்தால், கொசுக்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.
பொதுமக்கள் கூறியதாவது:
சுகாதாரம், கொசு ஒழிப்பு போன்ற பணிகளுக்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் நகராட்சி கட்டடங்கள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் கண்டறிந்து, அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.
மேலும், நகரில் ஆங்காங்கே, தேவையற்ற கழிவுகளும், டயர்களும் குவிந்து கிடக்கின்றன. எந்த பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகம் உள்ளதோ, அதனை நகராட்சி சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்க, இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.