/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்னும் எதற்கு 'லிக்விட் ஆக்சிஜன் டேங்க்?' கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்னும் எதற்கு 'லிக்விட் ஆக்சிஜன் டேங்க்?'
கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்னும் எதற்கு 'லிக்விட் ஆக்சிஜன் டேங்க்?'
கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்னும் எதற்கு 'லிக்விட் ஆக்சிஜன் டேங்க்?'
கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்னும் எதற்கு 'லிக்விட் ஆக்சிஜன் டேங்க்?'
ADDED : ஜூன் 04, 2024 11:39 PM

கோவை:கோவை அரசு கலைக் கல்லூாரி வளாகத்தில், கொரோனா காலத்தில் வைக்கப்பட்ட லிக்விட் ஆக்சிஜன் டேங்கை அகற்ற வேண்டும் என மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும், கொரோனா அலை பரவலின்போது, படுக்கை வசதிகள் கிடைக்காமல் பெரும்பாலானோர் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, சமுதாயக் கூடம், மண்டபங்கள், கல்லூரிகள் என பல்வேறு பகுதிகளில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.இதையடுத்து, மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து படுக்கைகளும் நிரம்பியதால், கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் அமைக்கப்பட்டன.
கொரோனா அலை ஓய்ந்து, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்ட 'லிக்விட் ஆக்சிஜன் டேங்க்' இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.
புவியியல் துறை, கலையரங்கம், வகுப்பறை உள்ளிட்டவற்றுக்குச் செல்ல மாணவர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்தும் வழியில் உள்ள, இந்த ஆக்சிஜன் டேங்கை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், ஏற்கனவே 3 ஆக்சிஜன் பிளான்ட் உள்ளது. அதனால், அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள லிக்விட் ஆக்சிஜன் டேங்க், பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, மாநில சுகாதாரத் துறை மற்றும் பொதுப் பணித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் எப்பகுதியில் தேவைப்படுகிறதோ, அங்கு இந்த லிக்விட் ஆக்சிஜன் டேங்குகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.