/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு

மேயர் பதவி
தி.மு.க., கவுன்சிலர்களில், 73 பேரில், 55 பேர் பெண்கள். மேயர் பதவி இட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டதால், அப்பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது. மண்டல தலைவர்கள் மீனா, லக்குமி இளஞ்செல்வி, கவுன்சிலர் நிவேதா மற்றும் சிலரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
சரி, அடுத்தது யார்?
அடுத்த மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு, தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது. அப்பதவியை கைப்பற்றுவதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். மத்திய மண்டல தலைவர் மீனா, இளைஞரணி அமைப்பாளர் தனபால் மனைவி அம்பிகா, 21வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி, 29வது வார்டு ரங்கநாயகி, மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
திறமையானவர் தேவை
கோவையில் கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாயத்தினர், பெரும்பான்மையாக இருக்கின்றனர். அதனால், இச்சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே, முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.