Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் பள்ளிகள் திறப்பது எப்போது?

தனியார் பள்ளிகள் திறப்பது எப்போது?

தனியார் பள்ளிகள் திறப்பது எப்போது?

தனியார் பள்ளிகள் திறப்பது எப்போது?

ADDED : ஜூன் 02, 2024 11:17 PM


Google News
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் திறக்கும் தேதி இதுவரை அறிவிக்கப்படாததால் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.

கோடை விடுமுறை நிறைவடைந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் வரும் 6 ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்னும் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளும் 10ம் தேதி திறக்கப்படும் என பள்ளிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, விடுமுறையை கழிப்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு, சொந்த ஊருக்குச் சென்ற பெற்றோர், மாணவர்கள் மீண்டும் ஊர் திரும்பி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் திறப்பு தேதியை இதுவரை அறிவிக்காமல் இருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பள்ளிகள் திறப்பு தேதியை விரைந்து அறிவிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, தனியார் பள்ளி மாணவரின் பெற்றோர் கோமதி கூறுகையில், 'அரசு சார்பில் பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்துவிட்டார்கள். ஆனால், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்காதது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தேதியை அறிவித்தால் அதற்கு தகுந்தாற்போல் பெற்றோர், மாணவர்கள் தயாராகஎளிதாக இருக்கும்,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us