/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் பள்ளிகளை திறப்பது எப்போது? தனியார் பள்ளிகளை திறப்பது எப்போது?
தனியார் பள்ளிகளை திறப்பது எப்போது?
தனியார் பள்ளிகளை திறப்பது எப்போது?
தனியார் பள்ளிகளை திறப்பது எப்போது?
ADDED : ஜூன் 03, 2024 01:35 AM
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் திறக்கும் தேதி, இதுவரை அறிவிக்கப்படாததால் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை நிறைவடைந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் வரும் 10ம் தேதி திறக்கப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.
ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள், பள்ளிகள் திறப்பு தேதியை, இதுவரை அறிவிக்காமல் உள்ளன. பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தனியார் பள்ளி மாணவர் ஒருவரின் பெற்றோர் கோமதி கூறுகையில், ''அரசு சார்பில் பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்துவிட்டார்கள். ஆனால், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்காதது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேதியை அறிவித்தால் அதற்கு தகுந்தாற்போல் பெற்றோர், மாணவர்கள் தயாராகஎளிதாக இருக்கும்,'' என்றார்.