/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடுகளில் மழைநீர் சேகரிப்பு என்னாச்சு! நகராட்சி நிர்வாகம் உறுதிபடுத்துமா? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு என்னாச்சு! நகராட்சி நிர்வாகம் உறுதிபடுத்துமா?
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு என்னாச்சு! நகராட்சி நிர்வாகம் உறுதிபடுத்துமா?
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு என்னாச்சு! நகராட்சி நிர்வாகம் உறுதிபடுத்துமா?
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு என்னாச்சு! நகராட்சி நிர்வாகம் உறுதிபடுத்துமா?
ADDED : ஜூலை 24, 2024 08:30 PM
பொள்ளாச்சி : கட்டட வரைபடத்தில் அனுமதித்தவாறு, மழைநீர் சேகரிப்பு செயல்படுவதை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலத்தில், பொள்ளாச்சி நகரில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது. அப்போது, நகராட்சி வாயிலாக, நீண்ட நாள் இடைவெளியில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர் மட்டம் தாழ்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால், புதிய கட்டடங்கள் கட்ட வரைபடத்துடன் மழைநீர் சேகரிப்புக்கு உண்டான அமைவிடத்தை தெளிவாக குறிப்பிட்டால் மட்டுமே, நகராட்சியால் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், வரிவிதிப்புக்கு பின், பெரும்பாலான கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக செயல்படுவதில்லை.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கட்டட கட்டுமானப்பணிகளின் போது, நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும்.
அதன்பின், குறிப்பிட்ட கால இடைவெளியில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு செயல்படுகிறதா என்பதை, நகராட்சி அலுவலர்கள் வாயிலாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மழைநீர் சேமிப்பு செயல்படாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தியேட்டர், ஓட்டல், வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை முறையாக சேமிக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.