/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேற்கு மண்டல எறிபந்து போட்டி; அசத்திய பிசியோதெரபி மாணவியர் மேற்கு மண்டல எறிபந்து போட்டி; அசத்திய பிசியோதெரபி மாணவியர்
மேற்கு மண்டல எறிபந்து போட்டி; அசத்திய பிசியோதெரபி மாணவியர்
மேற்கு மண்டல எறிபந்து போட்டி; அசத்திய பிசியோதெரபி மாணவியர்
மேற்கு மண்டல எறிபந்து போட்டி; அசத்திய பிசியோதெரபி மாணவியர்
ADDED : மார் 11, 2025 11:50 PM

கோவை; .எம்.சி.எச்., பிசியோதெரபி கல்லுாரியில், மேற்கு மண்டல அளவில் நடந்த எறிபந்து போட்டியில் கே.ஜி., கல்லுாரி முதல் பரிசு வென்றது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கே.எம்.சி.எச்., பிசியோதெரபி கல்லுாரியில் எறிபந்து போட்டி நடந்தது. 'பாவையர் களம்' என்ற கருப்பொருளில், பெண்களுக்குஅதிகாரமளித்தல், குழுப்பணி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டல பிரிவில், 18 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளின் நிறைவில், கே.ஜி., பிசியோதெரபி கல்லுாரி முதல் பரிசை தட்டியது.
இரண்டாம் பரிசை,ரத்தினம் பிசியோதெரபி கல்லுாரி அணியும், மூன்றாம் பரிசை எஸ்.என்.எஸ்., பிசியோதெரபி கல்லுாரி அணியும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தவமணி பரிசுகள் வழங்கினார். கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பிசியோதெரபி கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.