/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
இந்துஸ்தான் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 04, 2024 05:05 AM

கோவை : இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, வரவேற்பு விழா நடந்தது.
இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சரஸ்வதி, செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிரியா ஆகியோர், மாணவர்களை வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக, கோவை சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ''மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியை, சுய முன்னேற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும். தனிமனித ஒழுக்கத்துடன், உயர்ந்த சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கென இலக்கை நிர்ணயித்து, அதில் வெற்றி பெற உழைக்க வேண்டும்,'' என்றார். இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன், மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குனர் ஜெயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.