ADDED : ஜூன் 26, 2024 01:59 AM
கோவை;கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வரும் சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
அவ்விருதுகளை பெற தகுதியுள்ளவர்கள், ஜூலை 5ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.