/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறைந்த பட்ச கூலி கேட்டு காத்திருப்பு போராட்டம் குறைந்த பட்ச கூலி கேட்டு காத்திருப்பு போராட்டம்
குறைந்த பட்ச கூலி கேட்டு காத்திருப்பு போராட்டம்
குறைந்த பட்ச கூலி கேட்டு காத்திருப்பு போராட்டம்
குறைந்த பட்ச கூலி கேட்டு காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 05:51 PM

கோவை: குறைந்த பட்ச கூலி சட்டத்தின் படி ஊதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர், கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து, பல்வேறு கிராம ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் நிர்ணயம் செய்து, அந்த ஊதியத்தினை அரசாணை அரசிதழ் வெளியிட்ட நாள் முதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி.,மாவட்ட பொது செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.