/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பீளமேட்டில் உருவாகும் ஏறுதளத்தால் 'விகே' ரோடு; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் பீளமேட்டில் உருவாகும் ஏறுதளத்தால் 'விகே' ரோடு; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
பீளமேட்டில் உருவாகும் ஏறுதளத்தால் 'விகே' ரோடு; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
பீளமேட்டில் உருவாகும் ஏறுதளத்தால் 'விகே' ரோடு; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
பீளமேட்டில் உருவாகும் ஏறுதளத்தால் 'விகே' ரோடு; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
ADDED : ஜூலை 10, 2024 11:43 PM
கோவை : கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இரு வழித்தடங்களில் தலா இரண்டு ஏறு தளங்கள், இரண்டு இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன.
பீளமேடு ராதாகிருஷ்ணா மில் பஸ் ஸ்டாப் பகுதியில், பி.எஸ்.ஜி.,தொழில்நுட்ப கல்லுாரி அருகே ஏறு தளத்துக்கு துாண்கள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள ஓட்டல் வரை ஓடுதளம் அமைவதால், 'விகே' ரோடு என்றழைக்கப்படும் விளாங்குறிச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், அவிநாசி ரோட்டுக்கு வர முடியாத சூழல் ஏற்படும். இது, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதற்கு தீர்வு காண, கல்லுாரி அருகே அமைத்துள்ள துாண் உயரத்தை சற்று அதிகரித்து, ரோட்டை கடந்து துாண்கள் அமைத்து, ஏறு தளம் அமைக்க வேண்டும்; விளாங்குறிச்சி ரோட்டில் வருவோர் அவிநாசி ரோட்டை பயன்படுத்தும் வகையில், வழித்தடம் கொடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
இக்கோரிக்கையை, ம.தி.மு.க., கவுன்சிலர் சித்ரா தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் தெரிவித்தனர். அவர், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அதற்கு, 'ஏறுதளத்தின் அருகே நிலம் கையகப்படுத்தி, மூன்று மீட்டர் அகலத்துக்கு அணுகுசாலை அமைக்கப்படும். விளாங்குறிச்சி ரோட்டில் வருவோர், பயனியர் மில் ரோடு சந்திப்பு வரை சென்று, 'யூ டேர்ன்' அடித்து, அவிநாசி ரோட்டில் செல்லலாம்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
இது, அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.