/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்க ணும்! மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தல் வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்க ணும்! மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தல்
வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்க ணும்! மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தல்
வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்க ணும்! மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தல்
வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்க ணும்! மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 22, 2024 08:57 PM

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட்டை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்,' என, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க., நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி, வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், 100 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே கேட் செயல்பட்டது. இப்பகுதியில் இருந்து பொள்ளாச்சி நகரத்துக்கும், கோவை ரோட்டுக்கு சென்று வர ஒரு வழித்தடம் மட்டுமே மிக அருகாமையில் இருந்தது.
பாலக்காடு ரோட்டில் இருந்த மற்றொரு வழித்தடம் மேம்பாலம் கட்டிய பிறகு அடைக்கப்பட்டது. இந்த ரயில்வே கேட் முழுமையாக அடைக்கப்பட்டதால், அப்பகுதியே தீவு போல மாறிவிட்டது. ரயில்வே கேட் மேற்கு புறம் இருந்த கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, கேட் மூடப்பட்டதால், கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்வே கேட்டை அடைத்து விட்டதால், இப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும், நான்கு கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியதுள்ளது.
பி.கே.டி., பள்ளி பின்புறம் உள்ள மாற்றுத்தடத்தில் இரவு, 7:00 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளதால், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக பயன்பட்ட வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்த, ரயில்வே கேட்டை திறந்துவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''வடுகபாளையம் ரயில்வே கேட் முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டது. மாவட்ட கலெக்டரும், ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்,'' என்றார்.