/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது
வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது
வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது
வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டிய இரண்டு பேர் கைது
ADDED : ஜூலை 15, 2024 11:57 PM
கோவை;பெண்ணிடம் வழக்கை 'வாபஸ்' வாங்குமாறு மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம், வெங்கட கிருஷ்ணா ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரி,54; மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், லாலி ரோடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜன்,67, ராஜேஸ்வரன்,42, ஆகியோருக்கும் இடையே, சிவில் வழக்கு ஏற்கனவே உள்ளது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி மீனாட்சி சுந்தரி, காந்திபார்க் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு சென்ற நாகராஜன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோர், மீனாட்சி சுந்தரியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வழக்கை 'வாபஸ்' வாங்குமாறும் மிரட்டியுள்ளனர்.
ஆர்.எஸ்.புரம் போலீசில் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின்பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.