/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒக்கிலிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஒக்கிலிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒக்கிலிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒக்கிலிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒக்கிலிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூலை 05, 2024 02:04 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஒக்கிலிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கோவை வனக்கோட்டம், 110 பிரதேச ராணுவப்படை, ஒக்கிலிபாளையம் ஊராட்சி மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் (எல் அண்டு டி) இணைந்து, 2,500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
110 பிரதேச ராணுவப்படையின் சுபேதார் மேஜர் முருகன், கமாண்டர் முருகன் மற்றும் ராணுவ வீரர்கள், வனச்சரகர் ஐயப்பன் மற்றும் 'எல் அண்டு டி' நிறுவனம் சார்பில் திட்ட மேலாளர்கள் சுந்தரேசன், ராஜவேல், சக ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும், பொதுமக்களிடம் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சிக்கு சொந்தமான ஸ்ரீரங்கலட்சுமி நகர் பகுதியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 2,500 மரக்கன்கறுகள் நடப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கோவை 'எல் அண்டு டி' நிறுவன நிர்வாக மேலாளர் (யுசிஎஸ்எஸ் திட்டம்) வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.