/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறையில் கடுங்குளிர் சுற்றுலா பயணியர் தவிப்பு வால்பாறையில் கடுங்குளிர் சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறையில் கடுங்குளிர் சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறையில் கடுங்குளிர் சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறையில் கடுங்குளிர் சுற்றுலா பயணியர் தவிப்பு
ADDED : ஜூலை 22, 2024 03:02 AM
வால்பாறை;வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்குப் பருவமழை பெய்கிறது. கடந்த ஒரு வாரமாக காற்றுடன் கனமழை இடைவிடாமல் பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
கனமழையால், வால்பாறையில் கடுங்குளிர் நிலவுகிறது. எஸ்டேட் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் சிரமப்பட்டனர். சுற்றுலா பயணியர் கடுங்குளிரால் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர்.
வால்பாறையில், படகுசவாரி நிறுத்தப்பட்டதோடு, ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல், தமிழக -- கேரள எல்லையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வால்பாறையில் கடந்த சிலநாட்களாக சுற்றுலா பயணியர் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.